எமது நோக்கம

பரிபூரணமான சேவையை நிறுவுவதன் ஊடாக அதி சிறந்த சேவையை வழங்குதல்

எமது குறிக்கோள்

சேவை நாடுநர்களின் தேவைகளை உகந்த முறையில் நிறைவேற்றுவதற்கான மனித மற்றும் பௌதீக வளங்களை வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறனுடனும் வழிநடாத்துதல்.

 

நாவுல பிரதேசத்தின் வரலாற்றுப் பின்ணனி

நாவுல பிரதேசத்தின் வரலாற்றுப் பின்னணியைப் பொறுத்தமட்டில், இது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்குரியது. இப் பிரதேசமானது நாக வம்சத்தினரின் இருப்பிடமாக இருந்ததாக புராணக்கதைகள் கூறுகின்றன. இப்பிரதேசத்திற்கு நாவுல என்ற பெயர் குறிப்பிடப்படுவதற்கு பல வாய்மொழிக்கதைகள் உள்ளன. அவற்றுள் நாக வம்சத்தினரின் வாழிடமாக இருந்தமை அல்லது நாகத்தின் வடிவிலான ஒரு நீருற்று அமையப்பெற்றமை அல்லது நாகமரங்கள் நிறைந்திருந்தமை போன்ற கருத்துக்கள் பிரபல்யமானதாக கொள்ளப்படுகின்றன.

கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 9ஆம் நூற்றாண்டிற்குள் உருவாக்கப்பட்ட பல்லவ மரபைச் சேர்ந்த லக்திவ கட்டிடக்கலைக்குரிய நாலந்த கெடிகே புராதனக்கட்டடம் இப் பிரதேசத்தின் தலைமை செயலகப் பிரிவில் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க கொத்மல- தமன்கடுவ பிரதான வீதியானது நாவுல பிரதேசத்திற்குரிய அம்பன கிராமத்தின் ஊடாக செல்கிறது. வரலாற்றில் அபன என்ற பிரதேசம் ‘அபனவனயணீ’ என்று அறியப்பட்டது. இவ் அம்பன வனத்தின் ஊடாகப் பாயும் ஆறு பிற்காலத்தில் ‘அம்பன் கங்கை’ என்று கூறப்பட்டது.

துட்டகைமுனு மன்னனை பாம்பொன்று தீண்டிய போது இப் பிரதேசத்தின் நாலந்த- தியன்கடுவ வீதியில் வாழ்ந்த ராஜகுரு பரம்பரைக்குரியவர்கள்  மருத்துவம் செய்ததாக புராணக்கதைகள் கூறுகின்றன.

ஐ ஆம் பராக்கிரமபாகு இளவரசன் மற்றும் பொலன்னறுவையினை ஆட்சி செய்த கஜபா மன்னன் ஆகியோருக்கிடையே மூன்ட போரானது, வரலாற்றிலேயே நிகழ்ந்த மிகவும் கொடிய யுத்தமாகும். அவ் யுத்தத்தின் போது பராக்கிரமபாகு இளவரசனது பிரதான யுத்த களம் மற்றும் முகாமாக நாலாந்த, அம்பன, எலகமுவ மற்றும் தலாகொட ஆகிய முகாம்கள் விளங்கின. இப் போரின் போது ஐ ஆம் பராக்கிரமபாகு அரசன் இலங்கையினை ஒரு ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததுடன், அதற்கு நாவுல பிரதேசத்து மக்கள் அவ் வெற்றிக்கு பாரிய பங்கினை வகித்தனர்

அத்துடன், 1848ஆம் ஆண்டு மாத்தளை சுதந்திரப் போராட்டத்தின் போது தலைவர்களால் பாதுகாப்பான பூமியாக நாவுல பிரதேசத்தை தேர்ந்தெடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இக் காரணங்களின் அடிப்படையில், நாவுல பிரதேச செயலகமானது ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்ட பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

நிறுவனத்தின் செயற்பாடுகள்

பணிகளை மேற்கொள்ள முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இவ் அதிகாரி முன்பு பிரதி அரசாங்க அதிபர் என்று அழைக்கப்பட்டார்.பணிகளை மேற்கொள்ள முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இவ் அதிகாரி முன்பு பிரதி அரசாங்க அதிபர் என்று அழைக்கப்பட்டார்.
1963 ஆம் ஆண்டு நாவுல பிரதேச செயலகத்தின் ஆரம்பமாகக் கொள்ளப்படுகிறது. 1931ஆம் ஆண்டில் அமைச்சரவையில் மாத்தளை மாவட்டத்திற்குரிய ஆசனத்தில் ஒரு பகுதியாக இருந்த நாவுல 1990 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை லக்கல நிர்வாக எல்லைக்குட்பட்ட 04 பிரதேச சபைப்பிரிவின் அதிக சனத்தொகையைக் கொண்ட மற்றும் அதிக கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் கொண்ட பிரிவாகக் காணப்படுகிறது.
விவசாய பொருளாதார முறைமை  மற்றும் பௌத்த மத சூழலை அடிப்படையாகக் கொண்ட மக்கள் வாழ்கின்ற நாவுல பிரதேச செயலக பிரிவின் பிரதான நகரமாக நாவுல நகரம் விளங்குகிறது. மாத்தளை-தம்புள்ளை பிரதான வீதி, இந் நகரத்தின் மத்தியில் செல்வதுடன், புராணத்தில் இராஜரட்டை மற்றும் மலையகத்தை இணைத்த பிரதான வீதி இதுவாகும். மேலும், எலஹர மற்றும் கிரிதலே ஊடாக பொலன்னறுவை பிரதேசத்தையும்  கிழக்கு நோக்கி அமைந்துள்ள லக்கல, உடசியபத்துவையையும் இணைக்கும் வீதிகள் ஒன்றுடன் ஒன்று சந்;திக்கும் முற் சந்தியாகவும் இப் பிரதேசம் உள்ளது.


சுதுகங்க மற்றும் நக்கல்ஸ் மலைத்தொடரில் உற்பத்தியாகும் அம்பன்கங்கையை பிரதானமாகக் கொண்ட வடிகால் அமைப்பைக் கொண்டுள்ளதுடன், இப்பிரதேசம் முழுவதும் நாலந்த மற்றும் கல் ஓயா போன்ற கிளை நதிகள் பரவியுள்ளன. போவதென்ன நீர்த்தேக்கத்தை பிரதானமாகக் கொண்டு, 15 குளங்கள்;, 40 சிறிய மற்றும் பெரிய அணைக்கட்டுக்கள்; கொண்டமைந்துள்ளதுடன்;, அவற்றுள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மீ வெட்டிய மற்றும் வெமெடில்ல குளங்கள் அடங்கும். தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மொரகஹகந்த நீர்த்தேக்கம், நாவுல பிரிவிற்கு முழுவதுமாக உட்பட்ட கிராம உத்தியோகத்தர் 6 பிரிவுகள் மற்றும் பகுதி அளவில் உட்பட்ட கிராம உத்தியோகத்தர் 6 பிரிவுகளும்  உள்ளடங்கியுள்ளன. அத்துடன், மொரகஹகந்த நீர்த்தேக்கத்தினால் இப் பிரதேசத்தை சேர்ந்த 1600 குடும்பங்கள் பிரதேசத்திலிருந்து வெளியேறினார்கள். தற்போது நாவுல பிரதேச செயலகமானது 46 கிராம உத்தியோத்தர் பிரிவுகளையும் அவற்றிற்குரிய 118 கிராமங்களையும் கொண்டமைந்துள்ளன..

 

 

நாவுல பிரதேசத்தின் வரைப்படம்

map of naula1

நாவுல பிரதேசத்தின் நிர்வாக உறுப்பினர்கள்

  பெயர்                    பதவி                              இருந்து செய்ய
1 திரு. எல்.பி.ஹுருல்லே கோட்ட வருவாய் அலுவலர்  1960  1967
 2 திரு. டி.ஜி.ஏகநாயக்க கோட்ட வருவாய் அலுவலர்  1967  1977
 3 திரு. கே. ஏகநாயக்க கோட்ட வருவாய் அலுவலர்    
 4 திரு. ஏகநாயக்க கோட்ட வருவாய் அலுவலர்    
 5 திரு. மெடிவாகா கோட்ட வருவாய் அலுவலர்    
 6 திரு. குணதிலகா கோட்ட வருவாய் அலுவலர்    
 7 திரு. ரம்பண்டா ரணதுங்க கோட்ட வருவாய் அலுவலர்    
 8 திரு. கஜநாயக்க கோட்ட வருவாய் அலுவலர்    
 9 திரு.எச்.ஆர்.விஜேசிறி உதவி அரசாங்க அதிபர்  1977  1981
 10 திரு.ஜே.ஜி.பி.திசாநாயக்க உதவி அரசாங்க அதிபர்  1982  1982
 11 திரு.டபிள்யூ.பி.கணேகலா உதவி அரசாங்க அதிபர்  1983  1985
 12 திரு.டபிள்யூ.பி.ஏகநாயக்க உதவி அரசாங்க அதிபர்  1986  1989
 13 திரு.பி.எச்.கே.அபேகூன் பிரதேச செயலாளர்  1990   1990 
 14 திரு.பி.ஏ.பி.ஜெயவர்தனா பிரதேச செயலாளர்  1991   1992 
 15 திரு.டபிள்யூ.பி.ஏகநாயக்க பிரதேச செயலாளர்  1992   1992 
 16 திரு.பி.எல்.நந்தசிறி பிரதேச செயலாளர்  1995   1996 
 17 திரு.எச்.எம்.சோமதிலகே பிரதேச செயலாளர்  1996   2001 
 18 திரு.ஆர்.கே.பிரேமசிறி பிரதேச செயலாளர்  2001   2002
 19 திரு.கே.ஏ.சிரிசேன பிரதேச செயலாளர்  2002   2010 
 20 திரு.எம்.வர்ணகுலசூரிய பிரதேச செயலாளர்  2010   2012 
 21 திரு.என்.கருணாதிலகே பிரதேச செயலாளர்  2012   2017 
 22 திருமதி.ஏ.டி.ஜெயரத்னா பிரதேச செயலாளர்  2017   2020 
23 திரு.சி.கே.பி.இளங்கசிங்கே பிரதேச செயலாளர்  2020   2023 
24 திரு. எஸ்.விஜய்குமார் பிரதேச செயலாளர்  2023   இன்றைய நாள்

News & Events

21
ஜூலை2026
நேர்மைமிக்க கலாச்சாரம் - தூய்மையான இலங்கை

நேர்மைமிக்க கலாச்சாரம் - தூய்மையான இலங்கை

சுற்றறிக்கையைப் பார்க்கவும்

10
ஜூலை2026
பல் கலாச்சாரத் திட்டம்

பல் கலாச்சாரத் திட்டம்

மத்திய மாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

Scroll To Top